Rahman

A.R Rahman Family : இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக தன்னுடைய மனைவி மற்றும் மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இசைப்புயலாக தமிழ், கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். பிரம்மாண்ட படங்கள் என்றாலே அதற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்யப்படுபவர் ரஹ்மான் தான்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்களை பதிவிட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ஒரு புறம் ரசிகர்கள் பாராட்டினாலும் சுதந்திரம் என்பது வெறும் டீவீட்டில் தான் உள்ளது. போட்டோவிற்கு கூட பர்தாவுடன் தான் போஸ் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர் என விமர்சனமும் செய்ய தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் காஜிரா பேஸ்புக் பக்கத்தில் என்னுடைய முடிவுகளுக்கும் உடைகளுக்கும் என்னுடைய பெற்றோர் கட்டுப்பாடு விதிப்பதில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.