இந்த டிசம்பரில் செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக ஏ ஆர் ரகுமான் பதிவு செய்துள்ளார்.

AR Rahman About Ponniyin Selvan First Single Track : இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் இவர் இந்திய திரை உலகில் உள்ள அனைத்து மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ‌‌

வெற்றியை விரட்டிப் பிடித்த ‘கெத்து’ : நம்ம சிந்துவை முந்த முடியுமா..?

இந்த டிசம்பரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. ஏ ஆர் ரகுமான் பதிவு செய்த அதிரடி ட்வீட் - கொண்டாட்டத்துக்கு தயாரா??

மேலும் இவர் பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தினை மணிரத்னம் இயக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்புவை பத்தி வெளிய என்ன என்னமோ சொல்றாங்க! – விஜயின் தந்தை S.A.Chandrasekhar Bold Speech | HD

இந்த படத்தின் சூட்டிங் முழுமையாக முடிவடைந்து படம் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இந்த டிசம்பரில் செம சூப்பரான ட்ராக் இருக்கு. அதைப்பற்றி ஏதாவது கெஸ் இருக்கா என கேட்டுள்ளார். ஏ ஆர் ரகுமானின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகலாம் என கூறி வருகின்றனர்.