AR Murugadoss Salary for Thalapathy 65
AR Murugadoss Salary for Thalapathy 65

தளபதி 65 படத்திற்காக முருகதாஸ் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

AR Murugadoss Salary for Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான முருகதாஸ் தர்பார் படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து உருவாக உள்ள விஜய் 65 படத்தை இயக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்காக முருகதாஸ் தர்பார் படத்திற்கு வாங்கியது போலவே ரூபாய் 35 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார்.

தல 61 பற்றி பரவிய தகவல்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு – உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

ஆனால் பட்ஜெட்டை குறைக்குமாறு கறாராக கூறி உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததாலும் தெலுங்கில் இவர் இயக்கிய ஸ்பைடர் திரைப்படமும் தோல்வியை தழுவியதாலும் சர்க்கார் திரைப்படம் விமர்சன ரீதியாக பாதிக்கப்பட்டதாலும் வேறு வழி இல்லாமல் முருகதாஸ் இதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் அவருக்கு ரூபாய் 18 கோடி சம்பளமாக தருவதாக கூறியுள்ளது.

முருகதாஸ் அவர்களே வான்டட்டாக விஜயிடம் சென்று எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் இப்படத்தை வேற லெவலில் எடுத்துக் கொடுக்கிறேன் என கூறியதால் அவர் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.