ஏ ஆர் முருகதாஸின் அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

AR Murugadoss in Next Production Movie Title : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கி வருகிறார். மேலும் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது படத்திற்கு 1947 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தினை பொன் குமரன் இயக்குகிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள், நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.