நடிகர் ரஜினியின் தர்பார் திரைப்படம் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

AR Murugadoss explained the reason behind the failure of Durbar movie:

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியான தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவியது குறித்து இயக்குனர் முருகதாஸ் அளித்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த இயக்குனர் முருகதாஸ் அவர்கள் தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவியதற்கு காரணம் “படத்தின் படப்பிடிப்பு மார்ச்சி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் ஆகஸ்ட் மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருந்தார். நான் இந்த வாய்ப்பை கைவிட கூடாது என்று எண்ணினேன் ஆனால் அதுதான் தப்பாகிவிட்டது. எனது அதீத நம்பிக்கையும், சரியான முறையில் திட்டமிடாமல் இருந்ததும்தான் இப்படத்தின் தோல்விக்கு காரணம்” என்று தனது தவறை ஒப்புக்கொண்டு மனம் திறந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.