AR Murugadoss Clarification on Next Movie

அவருடன் நான் கூட்டணியா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

AR Murugadoss Clarification on Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது.

ஆனால் முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு திருப்தி அளிக்காததால் இந்த படம் நெல்சன் திலிப் குமார் கைக்கு மாறியது. இதனால் நொந்து போன முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்குவதாக தகவல் பரவியது.

அதுவும் தளபதி விஜய் சொன்ன அதே கதையை வைத்து சிவகார்த்திகேயனை இயக்கப்போகிறார் எனவும் கூறப்பட்டது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

அதாவது சிவகார்த்திகேயனுடன் நான் கூட்டணியா?? அதற்கெல்லாம் தற்போது வாய்ப்பில்லை என பரவிய தகவல் வெறும் வதந்தி என உறுதி செய்துள்ளார்.

இதனால் சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.