AR.Murugadoss and Rajini :
AR.Murugadoss and Rajini :

AR.Murugadoss and Rajini : 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.

ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் நிலையில் இப்படத்திற்கான போட்டோ ஷூட் அண்மையில் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

MR.லோக்கல் தள்ளிப்போகிறதா? படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வரும் 9-ம் தேதி மும்பை செல்கிறார்.

மேலும் தேர்தல் நாளில் ஒரு சின்ன பிரேக் எடுத்துகொண்டு சென்னை திரும்பும் ரஜினி உடனடியாக மும்பை புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

தந்தை – மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ரஜினியின் மகளாக ஜில்லா, பாபநாசம் படங்களில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.