AR Murugadoss about Avengers
AR Murugadoss about Avengers

AR Murugadoss about Avengers – உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல். ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முருகதாஸ்தான் இதற்கு காரணம் என்றும் பேச்சு எழுந்தது.

இதற்கு முருகதாஸ் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அவெஞ்சர்ஸ் படத்திற்கு தான் வசனம் மட்டுமே எழுதியாகவும் டப்பிங் பணிகளில் தான் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.