Apple Halwa Recipe
Apple Halwa Recipe

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 3,
நெய் – 100 கிராம்,
சர்க்கரை- 1/2 கப்,
ஏலக்காய் தூள்- 2 டீஸ்பூன்,
முந்திரி – 10,
பாதாம் – 5.

செய்முறை :

1) ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும். அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2) சிறிதளவு நெய் ஊற்றி பாதாம், முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.

3) அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.

4) பிறகு சர்க்கரை, நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

5) ஹல்வாவை எடுத்து, அதன்மேலே பாதாம், முந்திரியை தூவி பரிமாறவும். சுவையான ஆப்பிள் ஹல்வா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here