Appendix
Appendix

Appendix :

அப்பென்டிசைட்டிஸ் (குடல்வால்) மிகவும் ஆபத்தானதா? பார்க்கலாம் வாருங்கள்…

☆ அப்பென்டிசைட்டிஸ்:

அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்பு இருக்கும்.

அதுதான் குடல்வால் (appendix). இதில் ஏற்படும் கல், தேவையில்லாத கட்டி அல்லது நோய் தொற்று ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.

☆ சிறுநீரக கல் ஏற்படும் போது வரும் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்குமாம்.

☆ இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

☆ அப்பென்டிசைட்டிஸ் அறிகுறி:

குமட்டல்,வாந்தி, வயிற்றுப்போக்கு,பசியின்மை, காய்ச்சல், மலச்சிக்கல், தொப்புளை சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படும்.

☆ கடுமையான,தாங்கி

கொள்ள முடியாத அளவிற்கு வயிற்றுவலி ஏற்படும். இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் நோயின் கடுமை அதிகமாகி குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது மருத்துவர்களின் கூற்று.

☆ அப்பென்டிசைட்டிஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.

☆ நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும், சுகாதாரமான உணவை சாப்பிடுவதன் மூலமும் அப்பென்டிசைட்டிஸ் வராமல் தடுத்துவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here