app

பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறாக மாற்ற புதிய செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் மீட்க முடியாமல் மரணமடைந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசுதரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்காக அரசும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் Whistle Reporter ஒரு புதிய செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். உங்கள பகுதியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை பார்த்தால் அந்த இடத்தில் இருந்து செயலியின் மூலம் வலதுபுறம் கீழே உள்ள பச்சை பொத்தானை அழுத்தவேண்டும். அப்படி செய்தால் அந்த ஆழ்துளை கிணற்றை மழை நீர்சேகரிப்பு கிணறாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், மாற்றம் நம்மிடமிருந்தே துவங்கட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.