சூரரைப் போற்று பட நாயகி சூர்யாவின் பட பாட்டை செம அழகாக பாடியுள்ளார்.

Aparna Balamurali Sung Surya Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவே தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்னதி பாலமுரளி நடித்துள்ளார்.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது 14 வருடங்களுக்கு முன்னதாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள முன்பே வா என் அன்பே வா என்ற பாடலை செம அழகாக பாடியுள்ளார்.

இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.