Anupama Parameshwar Life Secrets

பிரபல நடிகருடன் அனுபமா பரமேஸ்வரன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் தமிழ் நடிகரும் பத்திரிகையாளருமான ஒருவர்.

Anupama Parameshwar Life Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷுடன் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக படமொனறில் நடித்து வருகிறார்.

இவர் பிரேமம் படத்தின் மூலமாகத்தான் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமா கேரியரில் தொடக்கத்தில் இருக்கும் இவருக்கு இளம் தெலுங்கு நடிகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அந்த நட்பு காதலாக மாறி தற்போது இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருவதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தான் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் இவர் கூறும் விஷயங்கள் முழுக்க முழுக்க உண்மைதானா என்பது கேள்விக்குறிதான்.

காரணம் இவர்தான் கீர்த்தி சுரேஷுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம், அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன என கிளப்பி விட்டவர்.

ஆனால் இறுதியில் அதெல்லாம் ஒன்றுமில்லை என கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்தே விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர் அனுபமா பரமேஸ்வரன் பற்றி கூறிய தகவல் உண்மைதானா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.