மாஸ்டர் படத்தில் நடிக்கும் மலையாள நடிகரை விக்ரம் படத்தின் நிச்சயமாக நடிக்க வைக்க வேண்டும் என தீயாக வேலை செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

Antony Vargees in Vikram Movie : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நூத்தி முப்பத்தி இரண்டாவது படமான விக்ரம் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆண்டனி வர்கீஸ் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருந்த மாஸ்டர் திரைப்படத்திலேயே நடிக்க இருந்தவர். கால்ஷூட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி கொண்டார். அவரை இந்த படத்தில் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.