Anti Indian Motion Poster

ப்ளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Anti Indian Motion Poster : தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் படங்களை மோசமாக விமர்சித்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

நெட்டிசன்களின் சவாலை ஏற்று இவர் ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தினை இயக்கியது மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இசை என அனைத்தையும் கவனித்துள்ளார்.

இந்த திரைப்படம் பாஜக அரசை மோசமாக விமர்சித்து காமெடி படமாக இயக்கியுள்ளார். இதனால் இந்த படத்தினை சென்சார் செய்ய முடியாது என சென்சார் குழு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். இதில் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது‌. இந்த படத்தில் பல யூ டியூப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.