Announcement On +1 and +2 Recorrection
Announcement On +1 and +2 Recorrection

Announcement On +1 and +2 Recorrection : தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் தேதியை வெளியிட்டது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியாவது: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்1 பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி பிற்பகல் முதல் http:/www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிக் பாஸ் சீசன் 4 முதல் இரண்டு போட்டியாளர்கள் உறுதி?? – அப்போ வெறித்தனமான கவர்ச்சியாட்டம் நிறையவே இருக்கு.!!

மேலும் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு அதே இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த விண்ணப்ப இரு நகல்கள் ஆகஸ்ட் 21 காலை10 மணி முதல் ஆகஸ்ட் 25 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கபட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறு மதிப்பீடு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ. 505 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்தில் மட்டும் ரூபாய் 305, பிற படங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது