வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Announcement of Valimai Second Single : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமையை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரோஷி நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.