எனிமி என்ற பெயரில் வெளியான விஷாலின் திரைப்படம் அண்ணாதுரை திரைப்படத்திற்கு நிஜத்திலும் எனிமியாக மாறியுள்ளது.

Annaththe Vs Enemy Movie Reviews : திரையுலகில் உருவாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களை குறிவைத்து வெளியாவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி என நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

இந்த படத்தை மட்டும் அல்லாமல் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்த எனிமி திரைப்படமும் வெளியானது. இது படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க வினோத் என்பவர் தயாரித்திருந்தார்.

அதேபோல் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் வேதாளம், விஸ்வாசம், திருப்பாச்சி உள்ளிட்ட படங்களின் கலவையாக இருப்பதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் படம் பார்த்து விட்டு படம் எதிர்பார்த்தபடி இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதே சமயம் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் அண்ணாத்த திரைப்படத்துக்கு பெயருக்கு ஏற்றார் போல் எதிரியாக மாறியுள்ளது எனிமி திரைப்படம்.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.