Annaththe Tamilnadu Collection in Heavy Rain

கொட்டித் தீர்க்கும் கனமழையால் அண்ணாத்த படத்தின் வசூலுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

Annaththe Tamilnadu Collection in Heavy Rain : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

படம் வெளியான இரண்டே நாளில் தமிழகம் முழுவதும் 100 கோடி வசூலை பெற்றது. தொடர்ந்து வசூலில் வேட்டையாடி வந்த அண்ணாத்த திரைப்படம் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இங்க எல்லாமே வேற Level-ல இருக்கு – ஆச்சர்யத்தில் Cooku With Comali #புகழ் ..! #pugazh #pugazhcomedy

அதாவது நேற்று மட்டும் தமிழகத்தில் வெறும் 2 கோடி மட்டும்தான் அண்ணாத்த திரைப்படம் வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் இருந்து தகவல் கிடைத்துள்ளது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் அண்ணாத்த படத்தின் வசூலுக்கு வந்துள்ள சிக்கல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் கொட்டும் மழை குறைந்த பிறகாவது படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.