அண்ணாத்த டைட்டிலால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சிறுத்தை சிவாவை விமர்சித்து வருகின்றனர்.
Annathe Title Trolls : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு படக்குழு அண்ணாத்த என டைட்டில் வைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
அண்ணாத்த தீம் ம்யூசிக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட இம்மான் – மரண மாஸ் வீடியோ இதோ
அறிவித்த தருணத்தில் செம டைட்டில் என தலைவர் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது நெட்டிசன்கள் சிரஞ்சீவி தெலுங்குவில் நடித்த படம் அன்னையா என்ற பெயரை தமிழில் அண்ணாத்த என வைத்துள்ளனர் என கண்டு பிடித்துள்ளனர்.
இதனால் கடுப்பான சில ரசிகர்கள் நீங்க என்ன அடுத்த அட்லீயா? என சிறுத்தை சிவாவை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அன்னையா படத்தின் ரீமேக் படமாக இது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.