Annathae Vs Vikram on Diwali 2021

இந்த வருட தீபாவளியில் ரஜினியும் கமலும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Annathae Vs Vikram on Diwali 2021 : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி கமல். 1980 முதல் தற்போது வரை தமிழ் சினிமாவை ஆளும் இருவரும் நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

அப்போதைய காலகட்டத்தில் இவர்களின் படங்கள் அடிக்கடி நேருக்குநேர் மோதிக் கொள்வது அதில் வெற்றி தோல்வி என இரண்டையுமே சந்தித்து உள்ளனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ‌ இந்த திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

இந்த படத்தினை படக்குழு வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருந்த விக்ரம் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த படத்தினையும் படக்குழு தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளன.

இந்த மோதலில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தன் பார்க்க வேண்டும்.