முறுக்கு மீசை மற்றும் கருப்பு தாடியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Annathae Shooting Spot Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்க டி இமான் இசையமைத்து வருகிறார்.

முறுக்கு மீசை மற்றும் கருப்பு தாடியுடன் கெத்தான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான புகைப்படம்.!! ‌‌

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரஜினி மற்றும் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்துக்கு யங் லுக்கில் முறுக்கு மீசை மற்றும் கருப்பு தாடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.

முறுக்கு மீசை மற்றும் கருப்பு தாடியுடன் கெத்தான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான புகைப்படம்.!! ‌‌