அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Annathae Release Date Announcement : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இம்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதே தீபாவளியில் சிம்புவின் மாநாடு, அருண் விஜய் நடிப்பில் வா டீல், விஷாலின் எனிமி உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.