இணையத்தில் செம மாஸாக அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Annathae Movie Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் வாசம் : சென்னை அணி.! நிலவரம் என்ன.?

இணையத்தில் செம மாஸாக வெளியான அண்ணாத்த டீசர் - தெறிக்கவிடும் ரசிகர்கள்

டி இமான் இசையமைக்க படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலும் சாரல் காற்றே என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவற்றைத் தொடர்ந்து ஆயுதபூஜை விருந்தாக இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.