Annathae Movie Release Details

திட்டமிட்டபடி தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீசாகுமா ஆகாதா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Annathae Movie Release Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை தல அஜித்தின் வீரம் வேதாளம் விசுவாசம் பட பின்னணியில் இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா, சதிஷ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

தற்போது ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அண்ணாத்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற பேஸ்புக் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில தினங்களில் முடிந்து விடும். ‌ அதன்பிறகு டப்பிங் பணிகள் மட்டும் தான் பாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அண்ணாத்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.