அண்ணாத்த படம் பற்றி சூப்பர் தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

Annathae Movie Dubbing Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

அண்ணாத்த படம் பற்றி புகைப்படத்துடன் வெளியான சூப்பர் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்தது. இதனையடுத்து படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் வேலைகளை தொடங்கி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!