அண்ணாத்த படத்தின் பட்ஜெட் மற்றும் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Annathae Movie Budget Details : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக அண்ணாத்த என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்தியாவுக்கு, தலிபான்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சூரி, குஷ்பு, மீனா, சதீஷ், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பட்ஜெட் ரூ 240 கோடி என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் வில்லன் களில் ஒருவராக வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த பாலா நடித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த தம்பி. தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர் கூட்டத்தில் சிக்கி தத்தளித்த Hiphop Tamizha ஆதி – Viral Video | Sivakumarin Sabadham | HD