அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Annathae First Look Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுவா? - விரைவில் காத்திருக்கும் கொண்டாட்டம்

கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கையாக நடிக்க குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

மேலும் படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இப்படியான நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Divorce-ஆ..?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Samantha..! | Viral On Social Media | Trending News HD

அதாவது வரும் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இதனை உற்சாகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.