Anjathe 2 Movie Update
Anjathe 2 Movie Update

மிஸ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் ஹீரோவாக நடிக்க இருப்பது யார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

Anjathe 2 Movie Update : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். விஷாலை வைத்து துப்பறிவாளன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

விஜய் படம் குறித்து ஜிவி.பிரகாஷ் போட்ட அறிவிப்பு – இணையத்தில் டிரெண்ட்

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. விஷாலுடன் ஏற்பட்ட தகராறில் மிஸ்கின் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கினார். இந்த ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட பத்து கதைகளை அவர் தயார் செய்துள்ளார்.

அதில் ஒன்று தான் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மிஷ்கினின் அடுத்த ஹீரோ சிம்பு இல்லை இவர் தானா?? வெளியான லேட்டஸ்ட் ஷாக்கிங் அப்டேட்!

மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நாயகனாக நரேன் நடித்திருந்தார். விஜயலட்சுமி நாயகியாக நடிக்க பிரசன்னா, அஜ்மல் அமீர், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் அருண் விஜய்யுடன் இன்னும் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.