Anjaan Hindi Dubbing Record
Anjaan Hindi Dubbing Record

தமிழில் பெயிலான அஞ்சான் திரைப்படம் இந்தி டப்பிங்கில் சாதனை படைத்துள்ளது.

Anjaan Hindi Dubbing Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று அஞ்சான்.

சூர்யாவும் சமந்தாவும் ஜோடி சேர்ந்து இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தை லிங்குசாமி இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது.

மேலும் இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரைபடத்திற்கு 140 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளன.

இப்போ வனிதாவுக்கு ஒரு உடம்பு தேவை.. அதுக்கப்புறம் பீட்டர் பால் நிலைமை இது தான் – பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

சூர்யாவின் பிறந்த நாளோடு ரசிகர்கள் இந்த உற்சாகமான தகவலையும் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய திரைப்படங்கள் உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.