Anitha Sampath Entry in Bigg Boss 4
Anitha Sampath Entry in Bigg Boss 4

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளராக அனிதா சம்பத் பேட்டி கொடுத்துள்ளார்.

Anitha Sampath Entry in Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் இன்று நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக அனிதா சம்பத் என்று கொடுத்துள்ளார்.

சன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். வெப் சீரிஸ் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

அனிதா சம்பத் அவர்களின் பெயர் பிக்பாஸ் போட்டியாளராக அடிபட்ட நிலையில் இவர் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. தற்போது இவர் போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இருப்பது ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.