பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி யார் காரணம் அனிதா சம்பத் கூறியுள்ளார்.
Anitha Sampath About Eviction : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்த அனிதா சம்பத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக கேட் அருகே நின்று நீண்ட நேரம் புலம்பிக் கொண்டிருந்தார் அனிதா. அதன்பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேற உன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என பாலாவை கூறினார். அவங்கதான் என்ன வச்சி செஞ்சிருக்காங்க என சொன்னார். அப்படி எல்லாம் இருக்காது என பாலா பதில் கொடுத்துள்ளார்.