Anitha Sampath Reply

டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் ஆடலாம் ஆனால் ஆணவத்தில் ஆடக் கூடாது என அனிதாவை விமர்சித்தவர் அவருடைய கணவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Anitha Husband Reply to Dancer Sathish : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று விற்பவர் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். ஆரம்பத்தில் இருந்தே இவரது நடவடிக்கைகள் பற்றி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகரும் டான்ஸ் மாஸ்டரான சதீஷ் அவர்களின் அனிதா பந்தத்தில் நடவடிக்கை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் அனிதாவின் கதை ரொம்ப ஓவரா இருக்கு. அதைக் கேட்கும்போது உருக்கமாகவும் இல்ல பீலிங்காகவும் இல்லை என தெரிவித்துள்ளார். இப்படி விடாமல் பேசினா எல்லாரும் போடுவாங்க என பதிவிட்டிருந்தார்.

சதீஷின் இந்த பதிவுக்கு அவருடைய கணவர் முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில் ஏண்டா நீங்க பசியினா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசிய பற்றி தெரிய வாய்ப்பில்லை.

அடுத்தவன் அனுபவிச்ச பசியும் வலியும் கிண்டல் பண்ண தோணும்.

பின்குறிப்பு : டான்ஸ் மாஸ்டர்னா டான்ஸ் ஆடலாம், ஆணவத்துல ஆடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.