Anitha 1st Post After BB Eviction

பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியேறியவர் ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Anitha 1st Post After BB Eviction : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அனிதா, ஆரி, ஆஜித், சிவானி மற்றும் கேப்ரெல்லா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் அனிதா தான் மிகவும் குறைந்த ஓட்டுகள் பெற்று இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

அந்தவகையில் அவர் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உளளார். அதற்கான எபிசோடுகள் இன்னும் ஒளிபரப்ப படாத நிலையில் அனிதா வெளியேறியது உதவி செய்யும் வகையில் அவரது அட்மின் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது ட்விட்டர் பக்கத்தில் தேங்க்ஸ் பார் எவிரிதிங் என கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.