வேட்டையன் படம் குறித்து தரமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. த. செ ஞானவேல் இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் பகத் பாஸில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ,மஞ்சு வாரியர், அமிதாபச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், வேட்டையன் பாடல் விரைவில் என்று பதிவிட்டு உள்ளார்.
இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நாளில் சூர்யா நடிப்பில் வெளியாக போகும் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக போவது குறிப்பிடத்தக்கது.