Anirudh

Anirudh Video : கத்தி படத்துக்கு மியூசிக் போட்டுட்டு இந்த பொழப்பு தேவை தானா? காசுக்காக எது வேணாலும் செய்வீர்களா? என அனிருத்தை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் ராக்ஸ் ஸ்டார் அனிருத். குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

இந்நிலையில் இவர் பிரபல கூல் ட்ரிங்க் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகி நடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூல் ட்ரிங்க் இதெல்லாம் வேண்டாம் என எவ்வளவு போராடினோம். ஆனால் நீங்க திரும்பவும் ஆதரவு கொடுத்து விளம்பரங்களில் நடிக்கறீங்க. காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா? என விளாசி எடுத்து வருகின்றனர்.

இந்த விளம்பரத்தில் அனிருத்துடன் பிக் பாஸ் டேனியலும் நடித்துள்ளார். நெட்டிசன்கள் அவரையும் விளாசி எடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.