Anirudh Says About Master on Live Chat
Anirudh Says About Master on Live Chat

மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து விஜயிடம் பேசியதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Anirudh Says About Master on Live Chat : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனரின் மகனாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய திறமையால் மட்டுமே உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், பாட்டு என மூன்றிலும் அசத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. லூசு போல போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஆடை, மேயாத மான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். அனிருத் செமையாக இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதியே இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் ரிலீஸ் செய்ய முடியாமல் படம் தள்ளிப் போய்க் கொண்டு வருகிறது.

மாஸ்டருக்கே பாடம் கற்பித்த கொரானா.. இப்போதைக்கு ட்ரைலர் கூட வராது.. இதை நீங்க கவனித்தீங்களா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த படம் எப்போது ரிலீஸாகும்? ட்ரைலர் எப்போது? என நாளுக்கு நாள் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகின்றனர். தற்போதைய சூழ்நிலை மாறினால் மட்டுமே படம் ரிலீசாகும் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் முதலில் உயிர் பிழைப்போம். அதன் பிறகு படம் பார்ப்போம். படத்தின் ரிலீஸ் தேதி உறுதியான பின்னரே ட்ரைலர் வெளியாகும் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அனிருத் ஹலோ லைவ் வீடியோ சாட்டில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது தான் தளபதி விஜய் உடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் மாஸ்டர் எப்போது ரிலீஸ் ஆனாலும் நிச்சயம் செமையாக இருக்கும் என அவர் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வார்த்தை கம்மிங் பாடலை பாடி தன்னுடைய லைவ்வை முடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளனர்.

சாந்தனு, சேத்தன், ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம், மகேந்திரன், ரம்யா, பிரிஞ்சா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.