இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.

Anirudh Salary in Vikram Movie : தென்னிந்திய சினிமாவின் பிரபல இசை அமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் நாளை மறுநாள் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் இசையமைத்து வந்த படங்களுக்கு ரூபாய் 2 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் விக்ரம் படத்திற்கு 4 கோடி ரூபாயாக சம்பளம் வாங்கி உள்ளார். ‌ இசையமைப்பாளர் அனிருத் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேப்போல் இதுவரை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த லோகேஷ் கனகராஜ் அவர்களில் விக்ரம் படத்தில் இருந்து தன்னுடைய சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.