Anirudh Review on Master
Anirudh Review on Master

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார் முக்கிய பிரபலம் ஒருவர். படம் குறித்த விமர்சனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

Anirudh Review on Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் மேலும் வில்லி வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாமல் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் மகேந்திரன், KPY தீனா, வி ஜே ரம்யா, ஆஹா கல்யாணம் பவி டீச்சர், வர்ஷா பொல்லம்மா என பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள மகாபாரத நடிகர்கள் – இதெல்லாம் நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்ல – புகைப்படங்களுடன் இதோ!

அனிருத் இசையமைக்க லோகேஷ் உடன் இணைந்து ஆடை மேயாத மான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை கிட்டத்தட்ட பத்து முறை பார்த்து விட்டதாகவும் படம் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் மாஸ்டர் படத்தைப் பார்த்ததாகவும் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.