இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்திரன். 3 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து தனது இசையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது லியோ, ஜெயிலர், இந்தியன் 2, ஜவான், தலைவர் 170 என வரிசையாக பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அனிருத் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி ஸ்டைலில் ஆட்டோக்காரன் கெட்டபில் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு எடுத்திருக்கும் புகைப்படத்தை ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தின் ஆட்டோக்காரன்பாடலுடன் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.