Anirudh Movie Director
Anirudh Movie Director

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அனிருத் ஹீரோவாக போவதாகவும் அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றியும் இன்ஸ்டாகிராமில் தெரிய வந்துள்ளது.

Anirudh Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ரஜினி, கமல் என அத்தனை நடிகர்களுக்கும் இசையமைத்து விட்டார். தற்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

ரசிகர்களுக்காக லைவ் வீடியோவில் மாஸ்டர் பாடலைப் பாடிய அனிருத் – செம மாஸான வீடியோவுடன் இதோ!

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் நீங்க எப்போ ஹீரோவாக நடித்தாலும் உங்களோட பர்ஸ்ட் படத்தோட தயாரிப்பாளர் நான் தான் என பதிவிட்டருந்தார்.

இதனையடுத்து கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப்குமர் அந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை நான் கேட்டு உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு.. உஷாரா இருங்க, கட்டாயம் இதை செய்யுங்க – கொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

தற்போது அனிருத் மட்டும் ஓகே சொன்னால் போதும் அவருக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர் நான் நடிக்கமாட்டேன் இசையை மட்டும் தான் அமைப்பேன் என கூறி வருகிறார்.

மேலும் நெல்சன் திலீப்குமார் இந்த கமல் பெயருக்கு அணிருத் முதலில் டாக்டர் படத்தை முடியுங்கள் என பதில் கமெண்ட் அடித்துள்ளார்.