Anirudh in Baba Movie

சூப்பர் ஸ்டாரின் பாபா படத்தில் இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ளார்.

Anirudh in Baba Movie : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியாகியது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று பாபா. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

அடேங்கப்பா எத்தனை?? கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.!!

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிரூத் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அனிருத்தின் புகைப்படம் பாபா பட போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

தற்போது இந்த போஸ்ட்டை சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. பாபா படத்தில் அனிருத் நடித்திருக்கிறார் என்று பலரும் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.