வாரிசு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட நடிகைகள் மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஸ்ரீகாந்த், நடிகர் ஷாம் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் குரலில் வாரிசு பாடல்!!… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வீடியோ நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்பாடல் வாரிசு படத்தின் முதல் பாடலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் குரலில் வாரிசு பாடல்!!… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!.

பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அனிருத் விஜய் படத்தில் பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் நேற்று வெளியான முதல் பாடலை கொண்டாடி வரும் ரசிகர்கள் இரண்டாம் பாடல் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.