Anirudh
Anirudh

Anirudh : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் Agnyaathavaasi படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படமும் தோல்வி அனிருத்தின் இசையும் பேசப்படவில்லை.

இதுபோக அந்த படத்தின் இயக்குநர், அனிருத்துக்கு தெலுங்கில் இசையமைக்க இன்னும் பயிற்சிகள் போதவில்லை என்று கிண்டல் செய்தார்.

மேலும் தன்னுடைய அடுத்த படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துவிட்டு பின்னர் நீக்கினார். இந்நிலையில்தான் அனிருத் இரண்டாவது முறையாக தெலுங்கில் இசையமைத்திருக்கும் ஜெர்ஸி படம் நேற்று திரைக்கு வந்துள்ளது.

தொடர் வெற்றி.. ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத் – இப்போ இவ்வளவு சம்பளமாம்.!

இந்த படமும் அதன் இசையும் தற்போது ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதன்மூலம் தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி சொன்ன அனிருத், அதை டிவிட்டரில் வெளிப்படையாகவே டிவீட் செய்துவிட்டார்.

பேட்ட படத்தின் தொடக்கத்தில் ரஜினி பேசும் ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” எனும் வசனத்தை தெலுங்கில் கட் செய்து அதையே தனது எதிரிகளுக்கு பதிலாக அனிருத் கூறியிருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.