Anirudh About Indian 2
Anirudh About Indian 2

லைவ் வீடியோவில் மாஸ்டர் பற்றியும் இந்தியன்2 பற்றியும் அப்டேட்களை வாரி வழங்கியுள்ளார் அனிருத்.

Anirudh About Indian 2 : தமிழ் சினிமாவின் இளம் இசை அமைப்பாளராக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அனிருத். அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பிகில் ஸ்டைலில் உருவாகும் அடுத்த படம் – போனி கபூர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

அதுமட்டுமல்லாமல் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இரண்டு படத்திற்கும் இசையமைக்கிறார் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருவதாகவும் படத்திற்கு தரமான டியூன் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு காக காத்துக் கொண்டிருப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

மேலும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தொடங்கியது பெரிய லக் தான்‌. இந்த நான்கு இரு தினங்களுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டு இருந்தால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை என்னும் நடந்து இருக்காது என அந்த லைவ் வீடியோவில் கூறியுள்ளார்.

அனிருத் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. அதேபோல் ஷங்கர் இயக்கும் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாநில கட்சிகளை அலற விடப் போகும் விஜய்.. சேம்பிள் வீடியோவை வெளியிட்ட படக்குழு.! 

மாஸ்டர் படத்தின் இசையைப் போல இந்தியன்2 படத்தின் இசையும் வேற லெவல் வெறித்தனமாக இருக்க வேண்டும் என்பதே கமல்ஹாசன் ரசிகர்கள் ஆசையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அதேபோல் அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீயும் நானும் என்ற பாடலுக்கு இசையமைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அனிருத் ஜெஸ்ஸி பிஜிஎம் வாசிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.