Anikha Surendhar Emotional Speech

விஸ்வாசம் படத்தில் தனக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாகவும் இருந்தாலும் தான் வெளியே செல்ல பயப்படுவதாக அனிகா சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

Anikha Surendhar Emotional Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் கடந்த 2015ஆம் வருடம் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்க அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்தர். இத்திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.

இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இன்றுவரை இந்த படத்திற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் அணிகா தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஒன்றில் விஸ்வாசம் படத்தில் நடித்ததற்காக எனக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனாலும் சிலர் நீ இன்னும் வளரவில்லை. குள்ளமாக உள்ளாய் என கூறுகிறார்கள். இதனால் நான் வெளியே செல்வதே இல்லை என சோகமாக கூறியுள்ளார்.

மேலும் அனிகா சுரேந்தர் சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.