ஜீ தமிழில் சர்வையர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக அஜித்தின் ரீல் மகள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Anikha Surendar in Survivor : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் ஜீ தமிழ். டிஆர்பியில் கடும் போட்டி போட்டு வரும் இந்த சேனலில் புதியதாக மிகப்பிரம்மாண்டமான முறையில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

டெஸ்ட் மேட்சில், கோலி-ஜோரூட் மோதல் : கலக்கப் போறது யாரு?

வெளிநாட்டில் ஒரு பிரம்மாண்ட தீவில் இந்த நிகழ்ச்சி பல கடுமையான டாஸ்க்குகளோடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் மிக மிக பிரபலமான ஒருவர் தொகுத்து வழங்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுந்தது.

ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்து கொள்ளும் அஜித்தின் ரீல் மகள்? - தீயாக பரவும் தகவல்.!!

இந்த நிலையில் தற்போது முதல் போட்டியாளராக தல அஜித்தின் ரீல் மகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அவரின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்தர். நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு தெலுங்குவில் வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அணிகா சுரேந்தர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் அவர் கலந்து கொள்ளும் முதல் ரியாலிட்டி ஷோ இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!