Anikha First Debut Movie As Heroine
Anikha First Debut Movie As Heroine

போட்டோ ஷூட்டால் அனிகாவிற்கு நாயகியாகும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Anikha First Debut Movie As Heroine : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் அனிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துக்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 15 வயதாகும் அனிகா விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மிலன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் குழந்தைப் பருவ பெண்ணாக நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் படங்களில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் தொடர்ந்து விதவிதமான போட்டோஷுட்டடுக்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

உடம்பை போட்டோ எடுத்து அனுப்ப சொன்ன ரசிகர்.. ரைசா அனுப்பிய புகைப்படம் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க!

அவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆம், மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க அனிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அறிமுக நடிகர் நடிக்க உள்ள இந்தப் படம் பள்ளி மற்றும் கல்லூரிக் கால காதல் கதையை மையமாக கொண்ட படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் வாய்ப்பு தேடி வருகிறார் அனிகா. தமிழ் ரசிகர்கள் இவரை நாயகியாக ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.