Anemia
Anemia

Anemia

☆ ஒருவரது உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

(1) நகம் உடைதல்:
உங்கள் நகம் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

(2) வெளிரிய தோல்:
உங்கள் தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்பட்டால், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

(3) ஹீமோகுளோன் அளவு குறைவு:
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், உங்கள் உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது.

(4) வயிற்று அல்சர்:
வயிற்று அல்சரால் அவஸ்தைப்பட்டு வந்தால், அப்போது உடலினுள் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

(5) படபடப்பு:
நீங்கள் அடிக்கடி படபடப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

(6) மார்பு வலி:

அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால், இதயத்தில் மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால், இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்து, அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும்.

● குறிப்பு
கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here