Anemia

Anemia : ரத்தசோகை நோய் 

உடலில் ஹீமோகுளோபின் என்னும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதையே ரத்த சோகை நோய் என்று கூறுவார்கள்.

அறிகுறிகள் :

1. களைப்பு

2. உடல் சோர்வு

3. உடல் நிறம் வெளிறி போதல்

4. மூச்சு வேகமாக வாங்குதல்.

ரத்தசோகை நோயை தீர்க்கும் உணவு வகைகள் :

பீட்ரூட் :

அதிக அளவு “இரும்பு சத்து “நிறைந்த ஒரு பொருள் பீட்ரூட். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து” இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாக” உதவுகிறது.

மாதுளம் பழம் :

வைட்டமின் C” நிறைந்துள்ளது. தினமும் மாதுளை பழச்சாறுடன் இலவங்கப்பட்டை தூள், தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

பேரீச்சம்பழம் :

பேரிச்சம் பழத்தில் “வைட்டமின் சி “”நிறைந்துள்ள உடலில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு துணைபுரிகிறது.

வாழைப் பழம் : 

வாழைப் பழம் ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. அதிக அளவில் “இரும்புச்சத்து ” நிறைந்தது. வாழைப் பழத்துடன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பச்சை காய்கறிகள் : 

கீரை வகைகள், வெந்தயம், ப்ரொக்கலி இவற்றில் இரும்புச் சத்து மிக அதிகமாக காணப்படுகிறது.

மேலும் வைட்டமின் B 12, போலிக் ஆசிட் அதிகமாக காணப்படுகிறது மேலும் உடலுக்கு சக்தியை அளிக்கக் கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன .இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்கி ரத்த சோகை நோயை விரட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here